இலங்கை அரசுடன் இந்திய அரசு எந்தவித தொடர்பும் வைத்து கொள்ளகூடாது!

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் வேலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது:- சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு தமிழர் நலன் காக்கவும். உலக தமிழர் நலன் காக்கவும் தமிழக வாழ்வுரிமை கட்சி போராடி வருகிறது. ஈழதமிழர் பிரச்சினை, காவிரி, முல்லை பெரியாறு நதிநீர் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வருகிறோம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, ஜெயவர்த்தனே கூட்டு ஒப்பந்தபடி ஈழதமிழர் நலன் காக்க அதில் உள்ள 13வது ஷரத்தை ரத்துசெய்ய ராஜபக்ஷ அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதை ரத்து செய்தால் இலங்கை அரசுடன் இந்திய அரசு எந்தவித தொடர்பும் வைத்து கொள்ளகூடாது

ஈழதமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply