எரிபொருள் தட்டுப்பாடோ விலை அதிகரிப்போ ஏற்படாதாம்

தட்டுப்பாடு ஏற்படாமல் எரிபொருள் விநியோகத்தை சீராக செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இரண்டு வாரத்தில் வழமைக்குத் திரும்பும் என கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் மாதம் 10ம் திகதி ஓமார் லைட் மசகெண்ணை 80 ஆயிரம் டொன் ஏற்றிய கப்பல் இலங்கை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரேபியன் லைட் மசகெண்ணை ஒரு லட்சத்து 35 ஆயிரம் டொன் ஏற்றிய கப்பல் டிசம்பர் மாதத்தில் இலங்கை வந்தடையும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் எரிபொருள் தட்டுப்பாடோ எரிபொருள் விலை அதிகரிப்போ ஏற்படாதென கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply