கட்சி பதிவு தொடர்பான பிரச்சினை விரைவில் தீர்த்துக் கொள்ளப்படும்
கட்சிப் பதிவு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை, பேச்சுவார்த்தைகளின் மூலம் விரைவில் தீர்த்துக் கொள்ளப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கடந்த வியாழக்கிழமை பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றிருந்தது.
எனினும் இதன் போது எந்த தீhமானங்களும் எடுக்கப்படாத நிலையில், இந்த கூட்டம் நிறைவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இது தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாக சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியைத் தவிர, தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய நான்கு கட்சிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என்று வலியறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply