கேபி குற்றவாளி இல்லையாம்! அப்பாவி தமிழ் இளைஞர்கள் குற்றவாளிகளா?
கே.பி மீது குற்றச்சாட்டுகளை சுமத்திய அரசாங்கம், தற்போது அவர் மீது எந்த குற்றமும் இல்லை என கூறுவதாக ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
கே.பி. என்பவர் கொடூரமான குற்றவாளி, அவரை சர்வதேச காவற்துறையினரும் தேடி வருகின்றனர். பிரபாகரனுக்கு பின்னர், புலிகள் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டவர். ஆயுத கப்பல்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளார். அவர் கொலை செய்துள்ளார் என பல குற்றச்சாட்டுகள் அவர் மீதுள்ளது.
இவ்வாறு கே.பியை பற்றி கூறிய அரசாங்கத்தின் அமைச்சரான கெஹெலிய ரம்புக்வெல்லவே, அவர் மீது குற்றச்சாட்டுகள் இல்லை என்றார். தற்போது அரசாங்கத்தின் பாதுகாப்பிலேயே அரசாங்கத்தின் செலவில் சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்.
விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்டதற்கான எந்த குற்றச்சாட்டும் இல்லாத ஆயிரக்கணக்கான இளைஞர்களை கைதுசெய்து தடுத்து வைத்துள்ளனர். இந்த நிலையிலேயே புலிகளின் தலைவரான கே.பி. மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என கூறி விடுதலை செய்துள்ளனர். இது தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கு செய்யும் அநீதி மாத்திரமல்லாது, வட பகுதி தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தி எதிர்காலத்தில் இதனால் பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.
கே.பியிடம் இருந்த கோடிக்காண பணம், தங்கம் மற்றும் சர்வதேசத்தில் இருந்த சொத்துக்களுக்கு என்ன ஆனது?. இதற்கு பதில் இல்லை என்பதால், கே.பிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட போவதில்லை என்பது தெளிவானது எனவும் விஜித ஹேரத் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply