எண்ணெய்ப் பிரச்சினை இல்லை! இரண்டு எண்ணெய் கப்பல்கள் வருகின்றன

80 ஆயிரம் மெற்றிக் தொன் மசகு எண்ணெயுடன் இரண்டு எண்ணெய் கப்பல்கள் நவம்பர் மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை வந்தடையும் என்று பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.  நவம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர்  ஒரு இலட்சத்து 35 ஆயிரம் தொன் மசகு எண்ணெய் இலங்கைக்கு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

சப்புகஸ்கந்தையில் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் நவம்பர் 8 ஆம் திகதி அல்லது 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். அதேபோல எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. களஞ்சியசாலையில் போதுமான அளவு மசகு எண்ணெய் இருக்கின்றது.

சப்புகஸ்கந்தையில் மசகு எண்ணெய் சுத்திகரிக்கும் இயந்திரங்கள் 45 வருடங்கள் பழமையானவை என்பதுடன் இயந்திரங்களை பழுதுபார்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply