13வது திருத்தச் சட்ட இரத்து போராட்டத்தில் இணையுமாறு அழைப்பு
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளிட்ட 11 அரசியல் கட்சிகளுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜாதிக ஹெல உறுமய, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி ஆகிய கட்சிகளுக்கும், தேசிய சுதந்திர முன்னணி இந்த கடிதத்தை அனுப்பியுள்ளது. எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவில்லை.
கடந்த 23 ஆம் திகதி தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பியந்ஜித் விதாரண பதிவு தபால் மூலம் இந்த கடிதங்களை சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதேவேளை 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை ஏன் இரத்துச் செய்ய வேண்டும் மாநாயக்க தேரர்களுக்கு தெளிவுப்படுத்தி அவர்களின் ஆசியை பெற்றுக் கொள்வதற்காக அமைச்சர் விமல் வீரவங்ச இன்று மாநாயக்க தேரர்களை சந்திக்க உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply