இளைஞர்களுக்கு வழி விடுவதற்காகவே பதவி விலகினேன் – கிருஷ்ணா
இளைஞர்களுக்கு வழி விடுவதற்காகவே தாம் பதவி விலகியதாக முன்னாள் மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்த பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா செய்தியாளர்களை சந்தித்து இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
இளைஞர்களுக்கு வழி விடுவதற்காக அமைச்சரவையில் இருந்து பதவி விலகியதாக தெரிவித்த அவர், இளைஞர்கள் அதிகளவில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற தமது விருப்பத்தை வெளியிட்டார்.
தான் வெளிவிகாரத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் இந்திய, பாகிஸ்தான் உறவு சிறப்பாக இருந்தது.
அதற்கான ஒத்துழைப்பை வழங்கியமைக்காக இந்திய பிரதமருக்கு தாம் நன்றி தெரிவிப்பதாகவும் எஸ்.எம்.கிருஸ்ணா குறிப்பிட்டார்.
இளைஞர்கள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற இதுவே சரியான தருணம் என்றும் அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply