விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குமாறு மீண்டும் கோரிக்கை

கொடைக்கானலில் சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு தீர்ப்பாயம் சார்பில் விடுதலைபுலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடை சரியா? தவறா? என்பது தொடர்பான விசாரணை நேற்று தொடங்கியது. நீதிபதி வி.கே. ஜெயின் தலைமையில் நடந்த இந்த விசாரணையில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, வக்கீல்கள், காவல் துறையினர் கலந்து கொண்டனர். முதல் சாட்சியாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, 2-வது சாட்சியாக செங்கல்பட்டு இன்ஸ்பெக்டர் பாஸ்கரனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தொடர்ந்து இன்று விசாரணை நடக்கிறது. விவாதம் முடிந்த வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ் ஈழ விடுதலை புலிகளை இந்திய அரசு சட்ட விரோத தடுப்பு சட்டத்தின் கீழ் 2 ஆண்டுக்கு ஒரு முறை தடை செய்து வருகிறது. பின் தடை செய்தது சரியா? அல்லது தவறா? என்பதை உறுதிப்படுத்த தீர்ப்பாயத்திற்கு அனுப்புகிறது. இதுபற்றி தீர்ப்பாயம் விசாரணை நடத்துகிறது.

கடந்த முறை தீர்ப்பாயத்தில் நானும் பங்கு பெற வேண்டும் என்று கேட்ட போது விசாரணையில் விவாதம் நடத்த என்னை அனுமதிக்காவிட்டாலும் நான் கேள்வி கேட்கவும், கருத்துக்களை கூறவும், நீதிபதி விக்ரம் சிங் அனுமதி அளித்தார். ஆனால் 2010-ம் ஆண்டு நவம்பர் 12-ந் திகதி விடுதலை புலிகள் இயக்கத்தை தடை செய்தது சரிதான் என நீதிபதி விக்ரம் சிங் தீர்ப்பளித்தார்.

தடை செய்தது சரியா? தவறா? என விசாரணை நடத்தத்தான் 2012-ல் டெல்லி நீதிபதி ஜெயின் தலைமையில் இந்த விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதை அனைத்து தரப்பினரும் எதிர்த்து வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இலங்கை ராணுவ செயலாளரும், இந்திய ராணுவ செயலாளரும் டெல்லியில் சந்தித்து தமிழ்நாட்டில் வெலிங்டனில் மட்டும் பயிற்சி அளிக்க முடிவு எடுத்து உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் மன்மோகன் சிங் அரசு நடைபெறுகிறதா? என ஐயம் ஏற்பட்டு உள்ளது. விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடை நீங்கும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply