இலங்கைத் தமிழர்களின் உரிமையை பாதுகாப்பதில் இந்திய பிரதமர் அக்கறை செலுத்த வேண்டும்
இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அக்கறை செலுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்பு சபையின் இந்திய கிளை, மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் 50 ஆயிரம் பேர் வரையில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கடிதத்தில், மன்மோகன் சிங் மன்மோகன் சிங் தொடர்பிலான ஆறு விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும என்று கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் தமிழ் மக்களின் புனர்வாழ்வு மற்றும் அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பு தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
அவர் பதவி விலகல் கடிதததை இந்திய பிரதமரிடம் கையளித்த பின்னர், செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply