இருவரைக் கொண்ட அகதிகள் படகு அவுஸ்திரேலியாவில் தஞ்சம்

இலங்கையர்களும் உள்ளடங்கிய அகதிகளின் குழு ஒன்றை கொண்ட படகு ஒன்று அவுஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளது. இந்த படகில் 2 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அவர்களுக்கு பாதுகாப்ப மற்றும் சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அவர்கள் கொக்கோஸ் தீவில் இருந்து கிறிஸ்மஸ் தீவுக்கு மாற்றப்படுவர் என்று அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினம் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் 14 பேருக்கு எதிராக இலங்கையில் தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் இருப்பதாக அவுஸ்திரேலியா விளக்கமளித்துள்ளது.

குறித்த 14 பேருக்கு எதிராகவும் இலங்கை பிடியாணையை பிறப்பித்திருந்ததாக, அவுஸ்திரேலிய குடிவரவுத் துறை அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடத்திச் செல்லப்பட்ட படகில் இருந்த 15 பேருள் 14 பேர் மாத்திரமே நேற்று நாடுகடத்தப்பட்டனர்.

எஞ்சியுள்ள ஒருவர் ஏற்கனவே கடந்த மாதம் 3300 டொலர்கள் வழங்கப்பட்டு, இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர் நாடுகடத்தப்பட்ட மூன்று வாரத்தில் மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு தப்பி வந்திருப்பதாக கிறிஸ்போவன் தெரிவித்துள்ளார்.

அவருக்கு எதிராக மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக வர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அவுஸ்திரேலியாவால் நாடுகடத்தப்பட்ட 14 இலங்கையர்களும் குற்றப் புலனாய்வுத் தரப்பினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply