இலங்கையில் ஐநா உரியமுறையில் கடமையை செய்யவில்லை – இலங்கை குற்றச்சாட்டு
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய முறையில் கடமைகளைச் செய்யவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட உள்ளக அறிக்கை தொடர்பில் அரசாங்கம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் உள்ளக அறிக்கை ஒன்றே வெளியிடப்பட்டுள்ளதாகவும் இதனால் இது குறித்து அரசாங்கம் உத்தியோகபூர்வமாக எந்த விளக்கத்தையும் அளிக்கப் போவதில்லை எனவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்திக் கொண்ட தருணத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய முறையில் தனது கடமையை செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மீது இலங்கை அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகித்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இலங்கை அரசாங்கத்துடனான உறவுகள் சுமூகமாக அமையவில்லை என ஐக்கிய நாடுகளின் உள்ளக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply