ஜனாதிபதி இன்று கசகஸ்தான் பயணம்
கசகஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று புறப்பட்டுச் செல்லவுள்ளார். அவர் கசகஸ்தானின் 3 நாட்கள் தங்கியிருந்து முக்கிய கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மத்திய ஆசியாவில் அமைந்துள்ள கசகஸ்தான் கனிய வளங்களை அதிகம் கொண்ட நாடு என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இதனிடையே, ஜனாதிபதியின் ஜனன தினத்தை முன்னிட்டு நேற்று நாடுமுழுவதும் பல்வேறு சமய நிகழ்வுகள் இடம்பெற்றன.
களனி வித்தியாலங்கார விகாரையிலும், உத்பலவன்ன ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திலும் இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்து கொண்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply