பாலஸ்தீனத்தில் நான்கு நாட்களில் 69 பேர் பலி
பல வருடங்களாக அமைதியாக இருந்த பாலஸ்தீன – இஸ்ரேல் பிரச்சினை தற்போது தீவிர சண்டையாக மாறியிருக்கிறது. இருதரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றனர். நேற்று இஸ்ரேலின் விமானப்படை பாலஸ்தீனத்தின் காசா நகரின் மீது கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில் 9 குழந்தைகள் உள்பட பொதுமக்கள் 23 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த நான்கு நாட்களாக நடந்து வரும் தாக்குதலுக்கு இதுவரை 69 பேர் இறந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. இந்த மோசமான தாக்குதல் குறித்து விவாதிக்க அராப் லீக் உச்சி மாநாட்டை கூட்ட பாலஸ்தீன நிர்வாகம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அராப் லீக், போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க தவறிய ஐநாவின் பாதுகாப்பு சபைக்கு தனது முழுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply