இலங்கை இந்திய கடற்பரப்பில் வெடிபொருட்கள் மிதக்கின்றன
இலங்கை இந்திய கடற்பரப்பில் ஒருவகையான வெடிப்பொருட்கள் மிதந்துக் கொண்டிருப்பதாகவும், அவ்வாறான பொருட்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், தமிழக மீனவர்களுக்கு இந்திய புலனாய்வுத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறான பொருட்களை கடலில் கண்டால், அவற்றை தீண்டவோ, அல்லது படகினைக் கொண்டு மோதவோ முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
த நிவ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த வெடிப்பொருட்கள் இலங்கை கடற்படையினரால் யுத்த காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்று இந்திய காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் தமிழக மீனவர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக காவற்துறையின் 14 படகுகள் இலங்கை இந்திய கடற்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை கடற்படையினர் இதுவரையில் எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply