வடமாகாண தேர்தலுக்கு முன் 13ம் திருத்தச் சட்டத்தில் திருத்தம்

வட மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படுவதற்கு முன்னதாக 13ம் திருத்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படலாம் என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதமளவில் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை வலுப்படுத்திக் கொள்ள நாட்டம் காட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்து, 19ம் திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகாரப் பகிர்வினை வழங்குவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply