சமாதான முனைப்புக்களை முன்னெடுப்பேன் ஜனாதிபதி உறுதி அளித்தார் – விக்கிலீக்ஸ்
ஜே.வி.பி.யை கட்டுப்படுத்த முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருதியதாக அமெரிக்கா தெரிவித்தது என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்கத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் திகதி இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அப்போதைய ஜனாதிபதி வேட்பாளரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவுடன், அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி லன்ஸ்டாட் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்தக் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
‘கிராமத்திலிருந்து வந்தவன் நான்’ ‘நம்புங்கள்’ ‘சமாதான முனைப்புக்களை தொடர்ந்தும் முன்னெடுப்பேன்’ என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் பகிரங்கமான உறுதி மொழி குறிப்பாக சர்வதேச சமூகத்திற்கு வழங்கப்பட வேண்டுமென தூதுவர் ஜெப்ரி லன்ஸ்டாட் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு குறிப்பிட்ட நாடொன்றுக்கு மட்டும் ஆதரவு வழங்கும் வெளியுறவுக் கொள்கை பின்பற்றப்பட மாட்டாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜே.வி.பியுடன் கூட்டமைப்பு வைத்துக் கொள்வதனால் பொருளாதாரப் பின்னடைவு ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஜே.வி.பி. தொடர்பான கருத்தை ஏற்றுக் கொள்வதாக அமெரிக்கத் தூதுவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply