சிரிய மோதலில் 4 லட்சம் பேர் பாதிப்பு
சிரியாவின் உள்நாட்டுக்கு போருக்கு பயந்து மக்கள் பக்கத்து நாடுகளான துருக்கி, லெபனன் மற்றும் ஜோர்டன் நாடுகளின் எல்லையில் அகதிகளாக தங்கி வருகின்றனர். இவர்கள் அனைவரும் பன்னாட்டு தொண்டு நிறுவனங்களால் பராமரிக்கப்படுகின்றனர். அங்கு அவர்களுக்கான போதுமான தங்குமிடமும் உடைகளும் இன்றி தவித்து வருகின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது மிகக் கடும் குளிர் காலம் நெருங்கி வருகிறது. இதிலிருந்து அவர்களை காக்க போதுமான உதவிகள் தேவை. குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் என தங்கியுள்ளவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தொண்டு நிறுவனத்தினர் எச்சரித்துள்ளனர்.
டமாஸ்கஸ், அலெப்போ என முக்கிய நகரங்களில் அதிபர் – புரட்சிப் படையினரிடையே தீவிர சண்டை நடக்கிறது. இதனால் இதுவரை 4 லட்சம் பேர் அகதிகள் என்பது இந்த வருட இறுதிக்குள் அது 7 லட்சமாக அதிகரிக்கும் என்று ஐ.நா. எச்சரிக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply