பதில் ஊடக அமைச்சர், ஊவா மாகாண பதில் முதலமைச்சர் நியமனம்

பதில் ஊடக அமைச்சராக சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ளதால் ஜனாதிபதி கஸகஸ்தானுக்கு விஜயம் செய்யும் முன்னர் இந்த நியமனத்தை வழங்கினார்.

இம்மாதம் 19 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையில் அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பா பதில் ஊடக அமைச்சராகப் பணியாற்ற சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாக சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது

இதேவேளை ஊவா மாகாண பதில் முதலமைச்சராக மாகாணத்தின் அமைச்சர் செந்தில் தொண்டமான் பதவியேற்றுள்ளார்.

இன்று காலை அவர் ஊவா மாகாண ஆளுநர் நந்தா மெத்யூவின் முன்னிலையில் பதில் முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ வெளிநாடு சென்றுள்ள நிலையிலேயே செந்தில் தொண்டமான் பதில் முதலமைச்சராகியுள்ளார்.

மாகாண வரலாற்றில் தமிழ் ஒருவருக்கு முதல் தடவையாக பதில் முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply