வல்வெட்டித்துறை தொலைத்தொடர்பு கோபுரத்தில் புலிக்கொடி

வல்வெட்டித்துறை, தீருவில் பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் நேற்றிரவு புலிக்கொடி ஒன்று பறக்கவிடப்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தீருவில் பகுதியில் அமைந்துள்ள தனியார் தொலைத்தொடர்பு கோபுரத்திலேயே இந்த புலிக்கொடி பறிக்கவிடப்பட்டிருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.  இந்நிலையில், இன்று அதிகாலை குறித்த பகுதிக்கு வந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் அந்த புலிக்கொடியை அவ்விடத்திலிருந்து அகற்றியதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

புலிக்கொடி பறக்கவிடப்பட்டிருந்த பகுதியில் விடுதலைப் புலிகளின் நினைவுத்தூபியொன்றே அமைக்கப்பட்டிருந்ததாகவும் பின்னர் அது அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்ட நிலையிலேயே தனியார் தொலைக்தொடர்பு கோபுரம் நிர்மாணிக்கப்பட்டதாகவும் பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர்.

எவ்வாறாயினும், இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறவில்லை எனவும், தாங்கள் அவ்வாறானதொரு புலிக்கொடியை அங்கிருந்து அகற்றவில்லை எனவும் வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply