வடக்கின் பாதை அபிவிருத்தி பணிக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி கடனுதவி

வடக்கின் பாதைகளை அபிவிருத்தி செய்வதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி கடனுதவி வழங்கியுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கின் முக்கிய பாதைகளை அபிவிருத்தி செய்ய ஆசிய அபிவிருத்தி வங்கி 98 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. வட மாகாணத்தையும் ஏனைய மாகாணங்களையும இணைக்கும் பாதைகளை அபிவிருத்தி செய்ய இந்த நிதி உதவி பயன்படுத்தப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

வடக்கு பாதை அபிவிருத்தித் திட்டத்திற்காக 112.8 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் செலவிடப்பட உள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் மூலம் 98 மில்லியன் டொலர் பணம் கடனுதவியாக கிடைக்கப் பெற உள்ளதாகவும்இ எஞ்சிய பணத்தை அரசாங்கம் செலவிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply