அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு எதிராக 56 இலங்கையர்கள் வழக்கு
அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பியனுப்பும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக 56 இலங்கையர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். தாம் நாடு திருப்பி அனுப்பப்படுவதன் ஊடாக தமக்குக் காணப்படும் அச்சுறுத்தலை அவுஸ்திரேலியா புறக்கணிப்பதாகவும் அவுஸ்திரேலிய உயர்நீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்திருக்கும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றவர்களில் 500 இலங்கையர்கள் நாடு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில் அடுத்த கட்டமாக அனுப்பப்படவிருந்த 56 இலங்கையர்களே உயர்நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளனர்.
தாம் நாடு திருப்பியனுப்பப்படுவதைத் தடுப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் தமது மனுவில் கோரியுள்ளனர்.
மனு நீதிமன்றத்தில் இருக்கும்வரை இவர்களை திருப்பியனுப்ப முடியாது என அகதிகள் நிறுவனத்தின் பிரதிநிதி இயன் ரின்டோர் தெரிவித்தார்.
இவர்களின் இந்த மனு எவ்வாறு பரிசீலிக்கப்படும் என்பது நீதி சம்பந்தப்பட்ட விடயம் என்றாலும், வாழ்வா சாவா என்ற போராட்டத்திலேயே அவர்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 2012ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரை அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் சட்டவிரோதமாக 16 ஆயிரம் பேர் வந்திருப்பதாக அவுஸ்திரேலியா செய்திகள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply