சிரியாவில் பள்ளி மாணவர்கள் மீது குண்டுவீச்சு: 29 பேர் பலி! ஒரே நாளில் 141 பேர் பலி
சிரியா தலைநகர் டமாஸ்கசில் அதிபர் படைக்கும் எதிர்ப்பாளர்கள் படைக்கும் இடையே கடுமையான உள்நாட்டுப்போர் நடந்துவருகிறது. இந்நிலையில் சிரியாத் தலைநகர் டமாஸ்கசின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அல் வாபிதின் முகாமில் செயல்பட்ட பள்ளியின் மீது நேற்று குண்டுகள் வீசப்பட்டன. இதில் பள்ளி ஆசிரியர் உள்பட மாணவர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர்.
1964-ம் ஆண்டு இஸ்ரேல் கோலன் ஹெயிட்ஸ் பகுதியை கைப்பற்றியபோது அங்கிருந்து வெளியேறி மக்கள் இப்பகுதியில் அகதிகளாக தங்கியுள்ளனர். மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணம் என அதிபர் படையினரும் புரட்சியாளர்களும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டியுள்ளனர்.
பள்ளியின் மீது நடத்தப்பட்ட இந்த தீவிரவாத தாக்குதலுக்கு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தலைநகரை சுற்றி நேற்று நடந்த தாக்குதலில் மட்டும் 141 பேர் கொல்லப்பட்டதாக ஆதாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply