ஜனாதிபதி தனது தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும்
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணையை விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தீர்மானத்தை பரிசீலனை செய்வதற்கு ஒரு சுயாதீன குழுவை நியமிப்பதற்கு தான் தீர்மானித்திருப்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ நாடாளுமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவேண்டும். என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பத்திரிக்கைகளின் பிரதம ஆசிரியர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் நிறைவடைந்ததன் பின்னர் ஒரு சுயாதீன குழுவை நியமிக்கப்போவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு தொடர்பில் ஊடகங்கள் கடந்த 14 ஆம் திகதி செய்தி வெளியிட்டிருந்தன. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக அரசியலமைப்பின் உறுப்புரை 107 க்கு அமைய கொண்டுவரப்பட்ட குற்றப்பிரேரணையில் உள்ள விடயங்களை ஆராய்வது நாடாளுமன்றத்தின் பொறுப்பாக உள்ளது.
எனவேஇஜனாதிபதி இந்ததீர்மானம் தொடர்பில் தான் என்ன செய்யவுள்ளார் என்பதனை நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கவேண்டுமே தவிர பத்திரிக்கைகளின் ஆசிரியர்களுக்கு அல்ல. முப்படைகளின் தளபதியும் இலங்கை ஜனநாயக குடியரசின் பிரதம ஆசிரியருமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ ஊடகங்களுக்கு அறிவித்தல் வழங்குவதற்காக அழைக்கப்பட்ட கூட்டமே அதுவாகும்.
தற்போது செயலிழந்துள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்திற்கு வந்தபோது ஊடகங்களின் ஆசிரியர்கள் கூட்டத்தை விட்டு வெளியேறியிருக்கவேண்டும். ஆனால் அவர்கள் தொடர்ந்தும் அங்கிருந்துவிட்டு ஜனாதிபதியுடன் காலை உணவை உண்டுவிட்டு வந்துள்ளனர்.
அரசியலமைப்பின் உறுப்புரை 107 க்கு அமைவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பிரதம நீதியரசரை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்வதை தவிர வேறு தெரிவு இல்லை. இந்த விடயத்தில் அவருக்கு தற்றுணிவு இல்லை. ஜனாதிபதி அவ்வாறு செய்யாது விடுவாராயின் அவர் அரசியலமைப்பை மீறியவராவார். அவர் உறுப்புரை 38(2) இன் கீழ் குற்றப்பிரேரணை மூலம் பதவியிறக்கப்படவேண்டியவர் ஆவார்.
மேலும், இந்த கட்டத்தில் விசாரணை நடத்த சட்டஏற்பாடுகள் இல்லை, நாடாளுமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் விசாரணைகள் நடத்தப்படவேண்டும என்பது லட்டீமர் ஹவுஸ் கொள்கையாகு எதிரானதாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply