ஐநாவுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம்

ஐக்கிய நாடுகளின் செயற்பாடுகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை செயற்படுவதற்கான, பொது செயலாளர் பான் கீ மூன் விசேட குழு ஒன்றை நியமிக்கவுள்ளமை தொடர்பில், இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. வெளியுறவுகள் துறை அமைச்சர் செயலாளர் கருணாதிலக அமுனுகம ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இறுதி யுத்தம் இடம்பெற்ற போது, ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்த சார்ள்ஸ் பெற்றி தலைமையிலான குழு, அண்மையில் தமது அறிக்கையை பான் கீ மூனிடம் கையளித்திருந்தது.

இதில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் பொது மக்களை பாதுகாக்க தவரிவிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்ததுடன் பல்வேறு பரிந்துரைகளையும் முன்வைத்திருந்தது.

இந்த நிலையில், இந்த பரிந்துரைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அதனை செயற்படுத்துவதற்கு குழு ஒன்றை அமைக்கவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் பிரதி பொதுசெயலாளர் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.

இதற்கான உறுப்பினர்களை பரிந்துரைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் கிளை நிறுவனங்களிடம் அவர் கோரி இருந்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கருணாதிலக அமுனுகம, இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை இதுவரையில் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு பேசி இருக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply