யாழ். பல்கலை மாணவர்களுக்கான உண்ணாவிரத போராட்டம் நடக்கும்

பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் விடுதலை செய்யுமாறு கோரி யாழில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் நடப்பது உறுதி என தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21ம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வாவின் நினைவுச் சதுக்கத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழரசுக் கட்சி முன்னெடுக்கவுள்ளது. அன்றைய தினம் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5 மணி வரையில் இவ் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் 27ஆம் திகதி யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வை அனுஷ்டித்தமை தொடர்பில் பயங்கரவாத குற்றத் தடுப்புப் பொலிஸாரினால் 11 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களில் 7 மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் 4 மாணவர்களிற்கு புனர்வாழ்வு வழங்குவதாகக் கூறி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவ் நான்கு மாணவர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியே தமிழரசுக் கட்சி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply