24 பணியாளர்களுடன் ஈரான் கப்பல் இலங்கையில் தடுத்து வைப்பு

இலங்கை காலி துறைமுகத்தில் 16 ஈரான் மற்றும் 8 இந்திய பணியாளர்களுடன் நிறுத்தப்பட்டிருந்த ஈரான் நாட்டு கப்பலை இலங்கை தடுத்து வைத்துள்ளது. எம்.வி. அமினா என்ற இந்த கப்பல் சீனாவிலிருந்து நவம்பர் 18ஆம் திகதி புறப்பட்டு இலங்கையின் காலி துறைமுகம் அருகே நங்கூரமிடப்பட்டிருக்கிறது.  இந்தக் கப்பலை தடுத்து வைக்குமாறு ஜெர்மன் வங்கி ஒன்று கேட்டதைத் தொடர்ந்து இலங்கை அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஜெர்மன் வங்கியிடமிருந்து 250 மில்லியன் யூரோவை கடனாக ஈரான் கப்பல் நிறுவனம் வாங்கியிருக்கிறது. ஆனால் கடனை வாங்கிய பிறகு பணத்தைக் கட்டாத ஈரான் நிறுவனம், கப்பலின் பெயரையும் மாற்றியிருக்கிறது.

இதனால் கப்பலை தடுத்து வைக்குமாறு இலங்கையை ஜெர்மன் நாடு கேட்டுக் கொண்டது. தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கப்பலில் 16 ஈரான் நாட்டவரும் 8 இந்தியரும் இருக்கின்றனர்.

இந்தியாஐச் ஏர்ந்த போசுன் யேசுராஜ் என்ற கப்பல் ஊழியர் இருதநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

ஆனால் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் கேப்டனால் அதே கப்பலில் இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இதுபற்றி இந்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply