சிறீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

மலர்ந்திருக்கும் 2013ம் ஆண்டு எமது மக்களின் வாழ்வில் விடிவினையும் சுபீட்சத்தினையும் கொண்டுவரவேண்டும் என தான் இறைனைப்பிரார்த்திப்பதாக சிறீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள் தனது புத்தாண்டு வாழ்த்துசெய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இயற்கையின சீற்றத்தினால்  வெள்ளம் மண்சரிவுகள் இடப் பெயர்வுகள் என மதம் இனம் மொழி கடந்து இந்நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் தவித்து நிற்க்கும் இவ்வேளையில் 2013 ம் ஆண்டு பிறந்துள்ளது.

இவ்வேளையில் நாம் இறைவனை வேண்டுவது இந்நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் தாம் பட்ட துன்பங்களில் இருந்து விடுபட்டு ஒருவரையோருவர் ஏற்று மன நிம்மதியுடன் அன்பாகவும் சமாதானமாகவும் வாழவேண்டும் என்பதேயாகும்.

கடந்த காலத்தில் தமிழ் மக்கள் பல்வேறு துன்பதுயரங்களுக்கும் உள்ளாகி பரிதவித்த நிலையில் இருந்து விடுபட்டு தாங்களும் சுயமரியாதைக்குரியவர்களாக தங்களுடைய உரிமைகளை சமாதான வழிச்சென்று பெற்று நிம்மதியுடன் வாழ பிறந்த புத்தாண்டு வழிகாட்ட வேண்டும்.

இம்மண்ணில் வாழும் அனைவரும் ஒருவரையொருவர் குற்றம் கூறாமலும் அடிதடிகளுக்கு உள்ளாகாமலும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு தன்னைப்போல் மற்றவர்களும் வாழவேண்டும் என்ற யேசுபிரானின்  கூற்றுக் கிணங்க விட்டுக் கொடுத்து நிம்மதியாவும் சந்தோஷமாகவும் வாழ இப்புத்தாண்டு வழிகாட்டவேண்டும் என இறைவனை வேண்டி இந் நாட்டில் வாழும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்தினையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply