யாழ். மின் உற்பத்தி நிலையம் தேசிய மின்கட்ட வலையமைப்புடன் இன்று இணைப்பு

உள்ளூர் முதலீட்டாளர்களின் முதலீட்டோடு யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையம் தேசிய மின்கட்ட வலையமைப்புடன் (01-01-2013) இன்று இணைகிறது. இந்த மின் உற்பத்தி நிலையத்தில் கடந்த 26ஆம் திகதி பரீட்சார்த்தமாக மின்சார உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் மூலம் 1,21,000 குடும்பங்கள் நன்மை அடைவரென மின்சக்தி, எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

தற்போது யாழ்ப்பாணத்துக்கு 90 வீத மின்சாரம் கிடைக்கிறது. இன்றுடன் இது 100 வீதமாக அமையு மென மின்சார சபையின் வட மாகாணத் துக்கான பிரதி முகாமையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார தனியார் நிறுவனம் இத்திட்டத்துக்கு மின்சார சபையின் சார்பில் 3500 மில்லியன் ரூபாவை முத லீடு செய்துள்ளது. 24 மெகாவற் மின்சார த்தை இங்கு உற்பத்தி செய்ய இயலும்.

08 மெகாவட் சக்தி கொண்ட 03 மின் உற்பத்தி இயந்திரங்கள் இம்மின் நிலையத்தில் இயங்கவுள்ளன. இதன் மூலம் யாழ். குடாநாட்டிற்கு 24 மணிநேரமும் மின்விநியோகம் வழங்கப்படும்.

இந்த மின்சார உற்பத்தி நிலையம் இயங்க ஆரம்பித்ததும் 2800 மில்லியன் ரூபாவாக இருக்கும் தற்போதைய நஷ்டத்தை 1500 மில்லியன் ரூபாவால் குறைக்கலாம் என்று மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இந்த மின் நிலையத்தில் மின் விநியோக நடவடிக்கைகள் ஜனவரி 16ஆம் திகதி முதல் ஆரம்பமாகுமென திட்டமிட்டிருந்தது.

இருப்பினும் அமைச்சரின் பணிப்பின் பேரில் குறித்த தினத்துக்கு முன்னர் மின் உற்பத்தியை ஆரம்பிக்க முடிந்துள் ளதாகத் திட்டப் பணிப்பாளர் எம். எஸ்.ஏ.கே. குணரத்ன தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply