வடக்கு கிழக்கு தமிழ் பெண்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு மிச்சலிடம் கோரிக்கை
இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் பெண்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அமெரிக்க முதல் பெண்மணியான மிச்சல் ஒபாமாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பரக் ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் பெண்கள் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு தமிழ் பெண்களின் நிலைமை குறித்து மி;ச்சல் ஒபாமாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் பெண்களில் பலர் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. யுத்தத்தின் போது கணவரை இழந்த பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் குடும்பத் தலைமைப் பொறுப்பை வகித்து வருவதாகவும், வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு தமிழ் பெண்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply