48 மணித்தியாலங்களில் 702 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்

திடீர் விபத்து காரணமாக கடந்த 48 மணித்தியாலங்களில் 702 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுள்ளனர். இவர்களில் 204 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைப் பெற்று வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ஆரியவங்ச தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் பண்டிகை காலத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த வருடம் வெளிநோயாளர் பிரிவில் 598 பேர் சிகிச்சைப் பெற்றதாகவும் இவ்வருடம் 498 பேரே சிகிச்சைப் பெற்றுள்ளதாகவும் இதன்மூலம் 17 சதவீத குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த வருடம் 219 பேர் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றதாகவும் இவ்வருடம் 204 பேரே தங்கியிருந்து சிகிச்சைப் பெறுவதாகவும் இதன்மூலம் 7 சதவீத வீழ்ச்சி காணப்படுவதாகவும் வைத்தியர் பிரசாத் ஆரியவங்ச குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply