அமெரிக்க ஜனாதிபதிகளின் பதவி ஏற்பு தினம் இன்றாகும்
அமெரிக்க ஜனாதிபதி பதவி ஏற்பு தினம் இன்றாகும். இத்தினம் 1937ஆம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொருமுறை ஜனாதிபதித் தேர்தல்களிலும் வெற்றி பெறும் ஜனாதிபதி ஜனவரி 20 திகதியே பதவி ஏற்பர். இறுதியாக நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இரண்டாம் முறையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற பராக் ஒபாமா, அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி வரும் இன்று பதவி ஏற்கிறார்.
இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால் முக்கியமான அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது. எனவே, அரசியலமைப்பு சட்டத்தின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் 20-ம் இன்று ஞாயிற்றுக்கிழமையன்று மரபுகளின்படி ஒருமுறை பதவி ஏற்றுக்கொள்ளும் ஜனாதிபதி ஒபாமா, பொதுமக்களின் முன்னிலையில் நடைபெறும் மாபெரும் விழாவில் 21-ம் திகதி நாளை இரண்டாவது முறையாக பதவி ஏற்றுக்கொள்ளவுள்ளார்.
பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க வெளிநாடுகளில் இருந்து முக்கிய அழைப்பாளர்கள் வாஷிங்டனில் குவியத் தொடங்கியுள்ளனர்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர்கிங் ஆகியோரது பதவியேற்பு விழாக்களில் பயன்படுத்தப்பட்ட பைபிள்களை சாட்சியாக வைத்து ஒபாமா பதவி ஏற்றுக்கொள்கின்றார்.
அமெரிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராபர்ட்ஸ், ஒபாமாவுக்கு 2 முறையும் பதவி பிரமாணம் செய்து வைக்கின்றார்.
இதற்கு முன்னரும், அமெரிக்க அதிபர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட டுவைட் ஈசன் ஹோவர், ரொனால்ட் ரீகன் ஆகியோர் இதேபோன்று 2 முறை பதவி ஏற்றுக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply