மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீடத்தை திறப்பதற்கு உடனடி நடவடிக்கை

மூடப்பட்டுள்ள மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தினை மீண்டும் திறந்து கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.  மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நேற்று (19) உயர் கல்வி அமைச்சர் ஒழுங்கு செய்திருந்தார். 

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் மற்றும் தேசிய டிப்ளோமா பாடநெறி மாணவர்களுக்கு இடையே கடந்த 16ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதலை அடுத்து பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்தது.

இந்த மோதலின் போது மூன்று மாணவர்கள் காயமடைந்தனர். இவர்களில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply