48மணிநேர சட்டமூலம் இன்று பாராளுமன்றில் சமர்பிப்பு
குற்றவியல் சட்டத்தின் கீழ் சந்தேகநபர் ஒருவரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான சட்டமூலம் இன்று 22ம் திகதி பாராளுமன்றத்தில் மீண்டும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குற்றவியல் சட்டத்தின் கீழ் ஒரு சந்தேகநபரை 24 மணித்தியாலங்களே தடுத்து வைப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. புதிய சட்ட திருத்தத்தின் பிரகாரம் 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய முடியும்.எனினும் அதற்கு நீதவான் ஒருவரின் அனுமதி பெறப்படவேண்டும்.
ஏற்கனவே இச்சட்ட மூலம் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டபோது உச்ச நீதிமன்றத்திற்கு இவ்விவகாரம் கொண்டு செல்லப்பட்டது.
உச்ச நீதிமன்றம் இச்சட்டமூலத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை நிரூபிக்கப்படவேண்டும் என தீர்ப்பு வழங்கியிருந்தது.
இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்படும் என எதிர்கட்சி பிரதம கொரடா ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முன்னிலை சோஷலிச கட்சி உள்ளிட்ட பல அமைப்புக்கள் இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply