இலங்கையில் இரண்டு பிரதம நீதியரசர்கள் – லக்ஷமன் கிரியெல்ல
யார் என்ன கூறினாலும் இலங்கையில் தற்போது இரண்டு பிரதம நீதியரசர்கள் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். உலகம் ஏற்றுக் கொண்ட பிரதம நீதியரசராக ஷிராணி பண்டாரநாயக்கவும் இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்ட பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸும் இருப்பதாக கொழும்பில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
கடந்த முறை இலங்கைக்கு எதிராக மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் பிரேரணை கொண்டுவரப்பட்ட போது, இலங்கையில் சுயாதீன நீதித்துறை உண்டு அதன் மூலம் மனித உரிமை மீறல் குறித்து ஆராயலாம் என இலங்கை அரசாங்கம் தெரிவித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் சுயாதீன நீதிமன்றம் இருப்பதாக இம்முறை கூற முடியுமா என லக்ஷமன் கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply