விஸ்வரூபம் படத்திற்கு 28ம் திகதி வரை தடை

நடிகர் கமல் நடித்து இயக்கி, தயாரித்து ஜனவரி 25ல் வெளியாக இருந்த விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு திடீர் தடை விதித்தது. இப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் என்ற எதிர்ப்பு கிளம்பியதால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டது. இப்படத்தை தியேட்டர்களில் திரையிடக்கூடாது என்று திரைய ரங்கு உரிமையாளர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர் மூல மாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

படம் மீதான தடையை எதிர்த்து, தணிக்கைக் குழு அனுமதி தந்த பிறகும் தடை விதிப்பது சட்ட விரோதம் என  சென்னை ஐகோர்ட்டில் இன்று (24.01.2013) நடிகர் கமலஹாசன் மனு தாக்கல் செய்தார்.

அவசர வழக்காக ஏற்று மனுவை விசாரிக்க நீதிபதி வெட்கட் ராமனிடம் கமல் முறையிட்டார். இதையடுத்து இன்று மாலை இந்த வழக்கு மீது விசாரணை நடைபெற்றது.

நீண்ட நேர விசாரணைக்கு பின்னர், விஸ்வரூபம் படத்திற்கு ஜனவரி 28ம் தேதி வரை தடைவிதித்து நீதிபது உத்தரவிட்டார்.  நீதிபதி வெங்கட்ராமன் 26ம் தேதி இப்படத்தை நேரில் பார்க்கவிருக்கிறார்.  அதன்பின்னர் இப்படத்தை வெளியிடுவதா? இல்லை தடை நீடித்து உத்தரவிடுவதா? என்று நீதிபதி உத்தரவிடுவார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply