அவுஸ்திரேலியாவின் எதிர்க் கட்சி பிரதித் தலைவர் இலங்கை விஜயம்

அவுஸ்திரேலியாவின் எதிர்க் கட்சி பிரதித் தலைவர் ஜூலி பிஷப் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.   இலங்கை வரும் இவர் இலங்கையில் இடம்பெறும் கடத்தல் சம்பவங்கள் குறித்து கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய எதிர்க்கட்சி பிரதித் தலைவருடன் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு பேச்சாளர் மைக்கல் கீனனும் இலங்கை வரவுள்ளார்.

அவுஸ்திரேலிய லிபிரர் கட்சியின் பேச்சாளர் பிஷப் இலங்கையில் தமிழ் பிரதேசங்களிற்கான விஜயத்தை மேற்கொண்டு அவர்களுடன் பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக இவர் யாழ்ப்பானத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு தமிழ்த் தலைவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply