வடகொரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு சீனா, ரஷ்யா எதிர்ப்பு

சமீபத்தில் வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்தியது. இதற்கு அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்நிலையில் நேற்று மற்றும் சீனாவின் வெளியுறவு மந்திரி யாங் ஜிச்சி ஆகியோர் மாஸ்கோவில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் கூட்டாக பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

வடகொரியா நடத்திய அணுகுண்டு சோதனையை நாங்கள் கண்டிக்கிறோம். இருந்த போதிலும் வடகொரியாவுக்கு எதிராக வெளிநாட்டு படைகள் செயல்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம். எந்த நடவடிக்கையும் ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதியுடன் தான் மேற்கொள்ளப் படவேண்டும்.

வடகொரியாவில் அமைதியை சீர்குலைக்காத வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி வெளிநாட்டு இராணுவத்தினர் வடகொரியாவுக்கு எதிராக செயல்பட முயற்சிபதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு கூறினார்கள். ஐக்கிய நாடுகள் சபையில் சீனாவும் ரஷ்யாவும் நிரந்தர உறுபினர்களாக உள்ளன என்பது குறிபிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply