அமெரிக்காவில் இனவெறி தாக்குதல்: சீக்கியர் மீது துப்பாக்கி சூடு
அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்தவர் கன்வல்ஜித்சிங் (46). சீக்கியரான இவர், லாரி டிரைவராக உள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு இவர் தனது மகனுடன் டேடோனா கடற்கரையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லாரி ஓட்டுனர்கள் அவரையும், மகனையும் கடுமையாக தாக்கினார்கள். மேலும் துப்பாக்கியால் சுட்டனர். அதில், கன்வல்ஜித்சிங் தொடை மற்றும் உடலில் குண்டு காயங்கள் ஏற்பட்டன. உடனே அவரை அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் கன்வல்ஜித்சிங்கின் மகன் காயமின்றி தப்பினார்.
இதுகுறித்து போர்ட் ஆரஞ்ச் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது இவர்களுக்கு இடையே முன்விரோதம் எதுவும் இல்லை என தெரிய வந்தது.
எனவே, இவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தும்படி அமெரிக்க சட்டத்துறை அதிகாரிகளிடம் சீக்கிய அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply