ஈரானுடன் 6 நாட்டுப் பிரதிநிதிகள் கஜகஸ்தானில் பேச்சு
அணுஆயுதம் தயாரிக்கும் திட்டத்தை கைவிடச் செய்வது தொடர்பாக ஈரானுடன் ஐநா பிரதிநிதிகள் நடத்தும் பேச்சுவார்த்தை கஜகஸ்தானின் அல்மதி நகரில் தொடங்கியுள்ளது.ஐநா பாதுகாப்பு கவுன்சிலி்ன் உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவற்றின் பிரதிநிதிகள், ஈரான் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.அணு ஆயுத தயாரிக்கும் திட்டத்தை ஈரான் கைவிட்டால், அதன் மீது விதித்துள்ள பொருளாதார தடைகள் தளர்த்திக் கொள்ளப்படும் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தெரிவித்துள்ளன. அமைதிப் பணிகளுக்காகவே அணு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாக ஈரான் கூறி வருகிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனின் பொருளாதார தடையால் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வது குறைந்துவிட்டதால், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அந்நாடு, இதர நாடுகளின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும் என்று தெரிகிறது. பேச்சுவார்த்தை சுமுகமாக நடப்பதாகவும், விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்றும் சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply