ஓய்வு பெற்ற பிறகு பெனடிக்ட்டுக்கு ‘கவுரவ போப் ஆண்டவர் பட்டம்’ தொடர்ந்து வெள்ளை அங்கி அணிகிறார்
உலகம் முழுவதும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் போப் ஆண்டவர் (தலைமை குரு) ஆக 16-ம் பெனடிக்ட் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாளை முதல் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதை தொடர்ந்து புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கியது. இந்த நிலையில் பணி ஓய்வு பெறும் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் எப்படி அழைக்கப்படுவார். அவர் எப்படிப்பட்ட உடை அணிவார் என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து வாடிகன் சிட்டியின் செய்தி தொடர்பாளர் பெடரிகோ லம்பார்டி நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அப்போது, ‘உங்களது புனித 16-ம் பெனடிக்ட், கவுரவ போப் ஆண்டவர், அல்லது கவுர ரோமன் கத்தோலிக்க தலைமை குரு’ என அவரை அழைக்கலாம் என்றார்.
மேலும் அவர் நீண்ட கணுக்கால் வரையிலான வெள்ளை நிற அங்கி அணிவார். புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுப்பதற்காக கான்கிளேவ் கர்தினால்கள் விரைவில் கூட உள்ளனர். அதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply