இலங்கை சர்வதேச விசாரணையை எதிர்கொள்ளும் நிலை: பொன்சேகா

சர்வதேச விசாரணையொன்றை இலங்கை எதிர்கொள்ளும் அபாயநிலை தோன்றியுள்ளது. இதற்கான முன்னெடுப்புக்கள் ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் முன்னெடுக்கப்படுகின்றது என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சர்வதேச நாடுகள் பலவும் இலங்கைக்கு எதிராக பல்வேறு மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் என்பவற்றை சுமத்தியுள்ளன. இதனை எதிர்கொள்ள அரசாங்கத்தினால் முறையான செயற்றிட்டம் இல்லை என்றும் அவர் சுட்டிகாட்டினார். நேற்று புதன் கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொன்சேகா இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச விசாரணைக்குழு இலங்கை வந்து போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்கள் என்பவற்றை விசாரணை செய்யும் நிலை ஏற்படப் போகின்றது. இதற்கு அரசின் பொறுப்பற்ற செயற்பாடுகளே பிரதான காரணமாகும்.

இராணுவத்திற்கு எதிராக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கும் அரசாங்கம் நியாயமான மறுப்புகளை முன்வைக்கவில்லை என்றும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply