உலக நாடுகளுக்கு அமெரிக்கா உத்தரவிட முடியாது: புதிய பாதுகாப்பு மந்திரி சக் ஹேகல்
அமெரிக்க பாதுகாப்புத் துறையின் புதிய மந்திரியாக சக் ஹேகல் நேற்று பதவி ஏற்றார். பின்னர் பென்டகனில் பணிபுரிபவர்களுக்கு உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது:-நாம் உலகின் பலம் மிக்க நாடாக இருக்கிறோம். அந்த பலத்தை எப்படி பயன்படுத்தப் போகிறோம் என்பதே முக்கியம். நாம் மற்ற நாடுகளுக்கு உத்தரவிட முடியாது. நட்பு நாடுகளுடன் இணைத்து, தலைமை ஏற்று செயல்பட வேண்டும். அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாடும் இதனை தனியாகச் செய்ய முடியாது. மற்ற நாடுகளை நாம் புத்திசாலித்தனமாக வழிநடத்த வேண்டும். நமது நாட்டிற்காகவோ, நமது நட்பு நாடுகளுக்காகவோ வளங்களைப் பயன்படுத்தும் போது புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.
நாம் தவறுகளைச் செய்துள்ளோம். நாம் மேலும் தவறுகள் செய்யலாம். ஆனால் நம் செயல்பாடுகள் அனைத்தும் நன்மையை மனதில் கொண்டே இருக்க வேண்டும். இதை நாம் மறந்து விடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply