செனல் 4 ஆவணப்படத்தை ஐ.நா.வில் திரையிட தடைவிதிக்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கை நிராகரிப்பு

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் செனல் 4 நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்தை திரையிட வேண்டாம் என இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவை நிராகரித்துள்ளது.இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை மையமாக வைத்து புதிதாகத் தயாரிக்கப்பட்ட ‘நோ பயர் ஸோன்’ என்ற ஆவணப்படம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் இன்று திரையிடப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதனை திரையிடுவதற்கு அனுமதியளிக்க வேண்டாம் என இலங்கை அரசாங்கத்தினால் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply