ஜனாதிபதித் தேர்தல் 2014 இல் நடத்தப்படாது
2014 இல் ஜனாதிபதித் தேர்தலோ வேறு எந்த தேர்தலுமோ நடத்தப்படமாட்டாது. இந்த வருடத்தில் 3 மாகாண சபைத் தேர்தல்கள் மட்டுமே நடத்தப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.தேர்தல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், தனது பதவியை மேலும் ஒரு வருடம் பாதுகாத்துக் கொள்ளவே 2014 இல் ஜனாதிபதித் தேர்தல் நடத்துமாறு ரணில் விக்ரமசிங்க கூறி வருகிறார். ஜனாதிபதியின் பதவிக் காலம் முடியும் வரை தேர்தல் நடக்காது. மத்திய மற்றும் வட மேல் மாகாண தேர்தல் குறித்து சு. க. மத்திய குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. தான் அகிம்சை கலந்து கொரில்லா நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். காந்தி பாதி, பிரபாகரன் பாதி கலந்து அரசியலில் அவர் ஈடுபட தயாராகிறார் போலும் என்றார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply