தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசாது 13வது திருத்தத்தை அமுல்படுத்த முடியாது

13ஆவது திருத்தத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்தியே அமுல்படுத்த வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசாது 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த முடியாது. 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஒரு தடவை செய்த தவறை மீண்டும் செய்ய முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது :-13 ஆவது திருத்தம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கருத்துக் கூறியுள்ளார். இந்தியாவுடன் சுமுகமாக இணைந்து 13 ஆவது திருத்தத்தை முன்னெடுக்க நாம் தயாராக உள்ளோம்.

13 ஆவது திருத்தத்தை சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் பேச்சு நடத்தியே அமுல்படுத்த வேண்டும். சம்பந்தன் அடங்கலான குழு இணங்குமானால் 13 ஆவது திருத்தம் குறித்து தெரிவுக் குழுவில் பேச்சுவார்த்தை நடத்தி அது குறித்து முடிவு எடுக்கலாம். இதனை அமுல்படுத்த பிரதான பங்காளியான த. தே. கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும்.

ஆனால் 13 ஆவது திருத்தம் தங்களுக்கு தேவையில்லை என சுமந்திரன் எம்.பி. சபையில் கூறினார்.

13 ஆவது திருத்தம் வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்டாலும் அந்த நோக்கம் நிறைவேறவில்லை எனவே 13 திருத்தம் தொடர்பில் ஒரு தடவை செய்த தவறை மீண்டும் செய்ய முடியாது. 13 ஆவது திருத்தம் பலாத்காரமாகவே திணிக்கப்பட்டது.

உறுதிகளை வழங்கி த. தே. கூட்டமைப்பை தெரிவுக் குழுவுக்கு அழைக்க நாம் தயாரில்லை தெரிவுக் குழுவில் அதிகாரப் பகிர்வு குறித்தும் 13 ஆவது திருத்தம் பற்றியும் பேசி முடிவு காண முடியும்.

ஒழுங்குப் பத்திரம் குறித்தே இங்கே தீர்மானிக்கப்படும்.

ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு வராமல் புலிகள் முன்னெடுத்த தனிநாட்டுக் கோரிக்கையை முன்னெடுக்கிறது.

உலகத் தமிழ் போரத்துடன் இணைந்து செயற்படுகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply