இலங்கைக்கு ஆதரவாக பிரிட்டனில் ஆர்ப்பாட்டம்

இலங்கைக்கு எதிராக தென் இந்திய அரசியல் வாதிகளால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை எதிர்த்து பிரிட்டனில் வாழும் இலங்கையர்கள் நாளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளனர். இலங்கையின் உண்மை நிலையை இந்தியாவுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நாளை 12ம் திகதி பிற்பகல் 1.00 மணிக்கு லண்டனிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரால யத்துக்கு முன்பாக மேற்கொள்ளப்படவுள்ளது.

பிரித்தானியாவிலுள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான இலங்கையர்களின் ஒன்றியம் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவுள்ளதுடன் ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அங்குள்ள இந்திய உயர்ஸ் தானிகருக்கு எழுத்து மூல மகஜர் ஒன்றையும் கையளிக்கவுள்ளது.

அன்று தெரிந்தோ தெரியாமலோ இந்தியாவின் ஒத்துழைப்புடன் தென்னிந்தியாவில் பிரபாகரன் தலைமையிலான தமிடிழ விடுதலைப் புலிகளுக்குப் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயங்கரவாதிகள் இலங்கையில் அப்பாவி மக்களையும், சிறுவர்கள், சிவில் உத்தியோகத்தர்களையும் கொன்றனர். இதனால் நாடு பெருமளவிலானோரை இழந்துள்ளது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, அமைச்சர்களான காமினி திசாநாயக்க, லலித் அத்துலத் முதலி, சி.வி. குணரத்ன, ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உட்பட மேலும் பல அமைச்சர்கள் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். மேயர் அல்பிரட் துரையப்பா, உட்பட தமிழ்த் தலைவர் பலரையும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இந்திய அமைதிப் படையினர் ஆயிரக்கணக்கானோரையும் புலிகள் கொன்று குவித்தனர்.

இலங்கையின் பல பொருளாதார கேந்திர நிலையங்கள், ஸ்ரீ தலதா மாளிகை, ஸ்ரீமாபோதி பெளத்த தலங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதுடன் நூற்றுக்களைக்கான பக்தர்களையும் கொன்றுள்ளனர்.

அரந்தலாவ பெளத்த பிக்குகள் படுகொலை, காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களை படுகொலை செய்தமை மற்றும் கத்தோலிக்க ஆலயங்கள் பலவற்றிலும் தாக்குதல்களை மேற்கொண்டு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

எமது படையினர் 30,000 பேர் தமது உரைத் தியாகம் செய்து இத்தகைய அழிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். ஐரோப்பிய நாடுகள் சிலவும் அரச சார்பற்ற அமைப்புகளினதும் நிதி உதவிகளுடனேயே தமது தமிடிழக் கனவை நனவாக்கிக்கொள்ள பயங்கரவாதிகள் முயற்சித்தனர். எமது தாய் நாட்டுக்கு எதிரானவர்கள் மற்றும் சில மேற்கத்தைய நாடுகளும் நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை வளர்த்து நாடு தீப்பற்றியெரிய வழிவகுக்கின்றன.

மீண்டும் பயங்கரவாதம் தழைப்பதைத் தடுக்கவும் நாட்டில் நிலவும் சமாதான சூழலை மேம்படுத்தவும், பெற்றுக்கொண்ட சுதந்திரத்தையும் அமைதியையும் பாதுகாக்கவும் தமிழ் நாட்டிலிருந்து உருவெடுக்கும் தமிடிழ பயங்கரவாதத்தைத் தோற்கடிப்போம் என்ற தொனியிலேயே நாளைய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply