நிலநடுக்க எச்சரிக்கைக்கு பதில் ஏவுகணை எச்சரிக்கை விடுத்த ஜப்பான்
நிலநடுக்க எச்சரிக்கை மெயில் அனுப்புவதற்கு பதிலாக, ஏவுகணை சோதனை எச்சரிக்கை மெயிலை அனுப்பியது ஜப்பான் போக்குவரத்துத் துறை அமைச்சகம்.ஜப்பானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதும், அது குறித்து விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை செய்து மெயில் அனுப்புவதற்கு பதில், வடகொரியா ஏவுகணை சோதனை நடத்துவதாக தவறுதலாக எச்சரிக்கை செய்தி அனுப்பிவிட்டது ஜப்பானின் போக்குவரத்துத் துறை அமைச்சகம்.எப்போது வேண்டுமானாலும் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தப்படலாம் என்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மின்னஞ்சல் தவறுதலாக அனுப்பப்பட்டதால், ஒரு விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த விமான சேவை சில நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. பின்னர் தனது தவறை உணர்ந்த போக்குவரத்துத் துறை உடனடியாக மாற்று மெயிலை அனுப்பியது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply