போரில் ஊனமுற்ற சிறார்களுக்கு உதவிகள் இல்லை

இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது, வடமாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் 19 ஆயிரத்து 420 சிறுவர்கள் அவயவங்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேற்கொண்டுள்ள கணிப்பீடுகளில் தெரியவந்திருப்பதாக வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் தர்மலிங்கம் நடனேந்திரன் தெரிவித்திருக்கின்றார்.இவர்கள் கை கால்களை இழந்தும், கண்களை இழந்தும் வேறு பல அவயவங்களை இழந்துமிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எனினும் இச்சிறுவர்களுக்கு இதுவரையான காலப்பகுதியில் போதிய அளவில் வாழ்வாதார நலச் சேவைகள் வழங்கப்படவில்லை. அவர்கள் அருகில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்பதற்குக் கூட ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்கிறார் நடனேந்திரன். இது குறித்து பிபிசி தமிழோசைக்குக் கருத்து தெரிவித்த விசேட கல்விக்கான ஆசிரிய ஆலோசகரும், ஓர்கான் எனப்படும் மாற்று வலுவுள்ளோருக்கான புனர்வாழ்வு நிறுவனத்தின் தலைவருமாகிய வி.சுப்பிரமணியம், இத்தகைய பிள்ளைகளின் கல்வி விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தி செயற்பட்டு வருவதாகக் கூறினார். அவயவங்களை இழந்த பிள்ளைகளின் கல்விக்காக விசேட கல்விப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டு, அவர்களுக்கு, குறிப்பாக பார்வையிழந்த மாணவர்களுக்கு பிரெயில் முறையில் கற்பிக்கவும், செவிப்புலனை இழந்தவர்களுக்கு சைகை மொழியில் கற்பிப்பதற்கும் ஆசிரியர்கள் பயிற்சியளிக்கப்பட்டு பாடசாலைகளில் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். எனினும், இந்தப் பிள்ளைகள் குடும்பங்களில் பெற்றோர்களின் சுமையாக மாறியிருப்பதுடன், இவர்களைப் பராமரிப்பதற்கென பெற்றோர் அதிக செலவு செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். ஆனால், அதற்கேற்ற வகையில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உள்ள குடும்பங்களின் வருமானம் அதிகரிக்கப்பட்டதாகவோ, அல்லது அவர்களுக்கு பொருளாதார உதவிகள் வழங்கப்பட்டதாகவோ இல்லை என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply