ஜனநாயகம், மனித உரிமை போன்றவற்றை பாதுகாப்பதில் இலங்கை எதிர்மறை வளர்ச்சி : பிரித்தானியா
மனித உரிமை மேம்பாடு, ஜனநயாகம் மற்றும் சட்ட ஆட்சி போன்றவற்றில் பொதுநலவாய அமைப்புக்களின் கொள்கைகள் கோட்பாடுகளை பின்பற்றுமாறு இலங்கையை பிரித்தானியா வலியுறுத்தியுள்ளதுடன் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதில் இலங்கை எதிர்மறையான வளர்ச்சிப் போக்கினை அடைந்துள்ளதாக பிரித்தானியா கவலை தெரிவித்துள்ளது.2012ஆம் ஆண்டில் இலங்கை மனித உரிமை நிலைமைகள் திருப்தி அடையும் வகையில் அமையவில்லை என சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை, கடந்த ஆண்டில் பல பாதகமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் குறிப்பாக கருத்துச் சுதந்திர முடக்கம், நீதிமன்றின் சுயாதீனத்தன்மைக்கு எதிராக செயற்படல், ஊடக சுதந்திர முடக்கம் போன்றவை தொடர்பில் திருப்தி அடைய முடியாது என தெரிவித்துள்ளது.
சட்டவிரோத ஆட்கடத்தல்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மீதான ஒடுக்கு முறைகள் உள்ளிட்ட பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் 2012ஆம் ஆண்டிலும் நீடித்ததாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
இதேவேளை, 2011ஆம் ஆண்டில் காணாமல் போன லலித் குமார் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பில் காத்திரமான விசாரணைகள் நடத்தப்படவில்லை. மனித உரிமை மேம்பாடு, ஜனநயாகம் போன்றவற்றில் பொதுநலவாய அமைப்புக்களின் கொள்கைகள் கோட்பாடுகளை பின்பற்றுமாறு இலங்கையை வலியுறுத்துவதாக பிரித்தானியா கோரியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply