அதிபர் தேர்தல் வெற்றியை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்
வெனிசுலாவில் அதிபராக இருந்த ஹுகோ சாவேஸ் கடந்த மாதம் புற்றுநோயால் மரணம் அடைந்தார். அதை தொடர்ந்து அங்கு நேற்று முன்தினம் அதிபர் தேர்தல் நடந்தது.அதில் துணை அதிபரும், சாவேசின் ஆதரவாளருமான நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஹென்ரிக் ரியேலை விட 1 1/2 சதவீதம் வாக்குகளே அதிகம் பெற்றுள்ளார்.
இதை ஹென்ரிக்கின் ஆதரவாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே மீண்டும் மறுதேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இந்த நிலையில், நேற்று ஹென்ரிக் கட்சியின் மாணவர் அணி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசார் மீது மாணவர்கள் கல்வீசி தாக்கினார்கள். கார்களுக்கு தீ வைக்கப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
எனவே, கலவரத்தை அடக்க போலீசார் தடியடி நடத்தினார்கள். கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. இதனால் கலவரம் கட்டுக்குள் அடங்கியது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply